யாழ்ப்பாணத்தில் கடை ஒன்றினை உடைத்து சுமார் 27 இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்களை களவாடிய குற்றச்சாட்டில் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி பகுதியில் உள்ள கடையொன்றினை நேற்று முன்தினம் புதன்கிழமை நள்ளிரவு வேளை உடைத்து , கடையில் இருந்த சுமார் 27 இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டன,
சம்பவம் குறித்து நேற்றைய தினம் வியாழக்கிழமை கடை உரிமையாளர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் ,விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நான்கு சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், களவாடப்பட்ட பொருட்களில் ஒரு தொகை பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
No comments