குருநாகல் – அநுராதபுரம் பிரதான வீதியின் தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை வேன் ஒன்றும், லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் வேனில் பயணித்த முல்லைத்தீவை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்தில் காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் தலவா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments