யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் அதனை பாவிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊரெழு பகுதியில் ஐஸ் போதைப்பொருள் பாவனையில் இளைஞன் ஒருவர் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், இளைஞனின் வீட்டை சுற்றிவளைத்த பொலிஸார் , ஐஸ் போதைப்பொருளையும் அதனை பயன்படுத்த உபயோகிக்கும் உபகரணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
அதனை அடுத்து இளைஞனை கைது செய்த பொலிஸார் , கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments