வரலாற்று சிறப்பு மிக்க வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெருந்திருவிழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறவுள்ள நிலையில் எதிர்வரும் 29ஆம் திகதி வெண்ணைத் திருவிழாவும், மறுநாள் 30ஆம் திகதி துகில் திருவிழாவும் நடைபெறவுள்ளது.
தொடர்ந்து எதிர்வரும் 02ஆம் திகதி கம்சன் போர் திருவிழாவும், 04ஆம் திகதி சப்பறத்திருவிழாவும், 05ஆம் திகதி தேர்த்திருவிழாவும், 06ஆம் திகதி சமுத்திர தீர்த்த திருவிழாவும், இடம் பெறவுள்ளது.
திருவிழாவிற்க்கான சுகாதார வசதிகளை பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும், பருத்தித்துறை பிரதேச சபையும் மேற்கொண்டுள்ளதுடன், வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் ஏனைய பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.
No comments