Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

செம்மணியில் கால்கள் மடிக்கப்பட்டு அமர்ந்த நிலையில் என்புக்கூடு


செம்மணி மனித புதைகுழியில் கால்கள் மடிக்கப்பட்டு இருத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் என்பு கூட்டு தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதனை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகளின் போது நேற்றைய தினம் வியாழக்கிழமை குவியலாக எட்டு மனித என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் , அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. 

அதன் போது , அவற்றுள் ஒரு மனித என்பு கூட்டு தொகுதி கால்கள் மதிக்கப்பட்டு இருந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

அது தொடர்பில் தெளிவான விளக்கத்தினை பெற யாழ் . பல்கலைக்கழக இந்து நாகரிக துறை மூத்த விரிவுரையாளர் புதைகுழி பகுதிக்கு அழைக்கப்பட்டு , அது தொடர்பிலான அவரது அவதானிப்புகள் விளக்கங்கள் கோரப்பட்டன. 

அவரது தனது அவதானிப்பின் படி , இந்து முறைப்படி முறையாக அடக்கம் செய்யப்பட்டமைக்கான சான்றுகள் காணப்படவில்லை எனவும், என்பு கூட்டின் கைகள் காணப்படும் நிலைமை உள்ளிட்ட காரணிகளால் அது முறையாக அடக்கம் செய்யப்பட்ட என்பு கூடு இல்லை என தனது அவதானிப்பை வெளிப்படுத்தி இருந்தார். 

அதனை அடுத்து அது தொடர்பிலான விபரமான அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் செ. லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார். 

அதேவேளை , செம்மணி மனித புதைகுழிக்காக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அனுமதித்த 45 நாட்கள் நாளைய தினம் சனிக்கிழமையுடன் நிறைவு பெறவுள்ள நிலையில் , அடுத்த வழக்கு விசாரணைகள் தொடர்பில் நாளைய தினம் நீதவான் திகதியிடுவர் என சட்டத்தரணிகள் தெரிவித்தனர். 

No comments