கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஒரு கிராமமே ஈடுபடுகின்றது. சட்டவிரோத மணல் கடத்தலை அவர்கள் தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர் என கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் வடக்கின் 5 மாவட்டங்களினதும் மாவட்டச் செயலர்கள் ஆகியோருக்கும் வடமாகாண ஆளுநருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மேலும் கருத்து தெரிவிக்கும் போது,
கிளிநொச்சி மாவட்டத்தில் மணல் அகழ்வில் ஒரு கிராமமே ஈடுபடுகின்றது. அங்கு சென்று கைது செய்து வருவதே பொலிஸாருக்கு சவாலாக உள்ளது.
அத்துடன் சட்டவிரோத மணல் கடத்தலை தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். அப்படிச் செய்பவர்கள் பொலிஸாருக்கு கூட பணம் கொடுத்து அதனைச் செய்கின்றமையும் எனது கவனத்துக்கு வந்துள்ளது.
எனது தலைமையில் விசேட குழு அமைத்து இதற்கு எதிரான நடவடிக்கை எடுத்தேன். 3 மாதங்களுக்குள் 130 டிப்பர்களை பிடித்தோம்.
கசிப்பு உற்பத்தி தொடர்பான விவகாரத்தில் பொலிஸாரை விட மதுவரித் திணைக்களத்தினருக்கு கூடுதல் அதிகாரங்கள் இருக்கின்றன. அவர்கள் இந்த விடயத்தில் போதிய ஒத்துழைப்பு வழங்குவதில்லை என தெரிவித்தார்.
கசிப்பு உற்பத்தி தொடர்பான விவகாரத்தில் பொலிஸாரை விட மதுவரித் திணைக்களத்தினருக்கு கூடுதல் அதிகாரங்கள் இருக்கின்றன. அவர்கள் இந்த விடயத்தில் போதிய ஒத்துழைப்பு வழங்குவதில்லை என தெரிவித்தார்.
வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் கருத்து தெரிவிக்கையில்,
இத்தகைய கலந்துரையாடல்கள் அவசியம். இதன் ஊடாக பெருமளவு பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர முடியும் என தெரிவித்தார்.
No comments