பொலிஸ் அதிகாரி ஒருவரை வாகனத்தினால் மோதி கொலை செய்ய முயற்சித்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்த ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல்காரரான குறித்த நபர், சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பு தெஹிவளை நெதிமால பகுதியில் போதைப்பொருள் சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரி ஒருவரையே இவ்வாறு வாகனத்தினால் மோதி கொலை செய்ய முயன்றுள்ளார்.
அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் , குறித்த நபரை குற்றவாளியாக கண்ட மன்று குற்றவாளிக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன் 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து மன்று தீர்ப்பளித்தது.
பிரதிவாதி செய்த செயல்களை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும், அதன்படி, அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்படுவதாக தீர்ப்பை அறிவித்த நீதிபதி லங்கா ஜயரத்ன மேலும் குறிப்பிட்டார்.









No comments