நுகேகொடை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சிறுவன் கல்வி பயின்று வந்த முன்பள்ளியின் உதவி அதிபர் உட்பட ஏழு பேரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 8 ஆம் திகதி முற்பகல் மிரிஹான, ஸ்டான்லி மாவத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றில், சிறுவன் உட்பட குழு ஒன்று, ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர் ஒருவரின் வழிகாட்டுதலின் கீழ் ஹோட்டலின் நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்தபோது, சிறுவன் நீரில் மூழ்கியுள்ளார்.
பின்னர் சிறுவன் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் உயிரிழந்து காணப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் முன்பள்ளியின் உதவி அதிபர், விளையாட்டு ஒருங்கிணைப்பு அதிகாரி, பிள்ளைகளுக்கு பொறுப்பான இரண்டு ஆசிரியர்கள், முன்பள்ளி ஊழியர் ஒருவர் மற்றும் இரண்டு நீச்சல் பயிற்றுனர்கள் உட்பட 7 பேரை கைது செய்துள்ளனர்.






No comments