யாழ்ப்பாணத்தில் விஷமிகளால் அடித்து உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி அன்றைய தினமே அதேயிடத்தில் மீள் கட்டப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் அணையா விளக்கு தூபி விசமிகளால் நேற்றைய முன்தினம்புதன்கிழமை நள்ளிரவு அடித்து உடைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவுக்கு அருகில் கடந்த ஜூன் மாத இறுதியில் செம்மணி படுகொலைக்கு நீதி கோரி அணையா விளக்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தின் போது அணையா விளக்கு ஏற்றபட்டு இருந்தது. போராட்டத்தின் முடிவில் அப்பகுதியில் அணைய விளக்கு நினைவு தூபி ஒன்றும் அமைக்கப்பட்டது.
குறித்த நினைவு தூபியை விசமிகள் அடித்து உடைத்துள்ளனர். இந்நிலையில் குறித்த நினைவு தூபியை மீள அமைக்கும் பணிகள் நேற்றைய தினமே ஆரம்பிக்கப்பட்டு , கட்டி முடிக்கப்பட்டுள்ளது.









No comments