காலி, பத்தேகம பிரதேச சபையின் உப தலைவர் சமன் சி லியனகே மீது இனந்தெரியாத நபரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தனது மனைவியுடன் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, பத்தேகம, கொடகந்த பகுதியில் வீதியை மறித்து மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உப தலைவர் தற்போது காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன், தாக்குதல் தொடர்பில் பொத்தல பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பத்தேகம பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரே இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
தாக்குதல் தொடர்பாக பொத்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 





 
 
 
No comments