நிலைமாறு கால நீதி இறந்து விட்டது. நாம் அதன் வாலாக இருக்கும் ஏங்கிய இராச்சிய வை பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறோம். நாம் அரசாக சிந்தித்து தந்திரோபாயத்தை கையாள வேண்டும். நாம் பிராந்தியத்தையும் நாடுகளையும் நட்புடன் பலப்படுத்த வேண்டும். அதனூடாகவே நாம் எமது போராட்டத்தை வெல்ல முடியும் என அரசியல் ஆய்வாளர் ம. நிலாந்தன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் 2009ஆம் ஆண்டு இராணுவத்தால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கான நீதி கோரி போராடிய வைத்தியர் மனோகரனையும் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களையும் நினைவு கூரும் "கானல் நீதி" எனும் தலைப்பிலான உரையாடல் இன்று யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் இடம்பெற்றது.
அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
அரசியலாக நாம் பிரச்சனைகளை கையாளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். செம்மணி, நாவற்குழி போன்ற பல்வேறு வழக்குகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. எம்மிடம் நீதிக்கான போராட்டத்தின் தொடர்ச்சி இல்லாது உள்ளது. நீதிக்கான போராட்டத்தில் அரசின் கூட்டமைப்பிடம் தான் நீதியை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
நீதிக்கான தேடல் இருக்கும் போது இன அழிப்பின் தலைமை தாங்கிய ஒருவருக்கே நாம் மீண்டும் வாக்களித்திருக்கிறோம். இது ஒரு மிதமான முரணாக காணப்படுகிறது.
நிலைமாறு கால நீதி இறந்து விட்டது. நாம் அதன் வாலாக இருக்கும் ஏங்கிய இராச்சிய வை பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறோம். நாம் அரசாக சிந்தித்து தந்திரோபாயத்தை கையாள வேண்டும். நாம் பிராந்தியத்தையும் நாடுகளையும் நட்புடன் பலப்படுத்த வேண்டும். அதனூடாகவே நாம் எமது போராட்டத்தை வெல்ல முடியும் என மேலும் தெரிவித்தார்.
No comments