வலிதென்மேற்கு பிரதேச சபையின் அபிவிருத்தி திட்டங்களிற்கான கேள்வி கோரலில் மிகுதியாக உள்ள நிதிகளை பண்டத்தரிப்பு வட்டார அபிவிருத்திக்கான திட்டங்களில் பயன்படுத்தவும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஜிப்பிரிக்கோ கோரிக்கை விடுத்துள்ளார்
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இல்லாத நிலையில் பொது மக்களினதும் எனது வேண்டுகோளின் பேரிலும் பிரதேச சபை செயலாளரின் நிர்வாகத்தில் சபை இயங்கிய போது கடந்த 2024ஆம் வருட இறுதியிலும் 2025 இவ் வருட ஆரம்பத்திலும் பல மில்லியன் பெறுமதியான அபிவிருத்தி வேலைகள் பிரதேச சபை நிதி , மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதி (PSDG) மூலமாக பண்டத்தரிப்பு வட்டார அபிவிருத்தி வேலைகளுக்கான நிதிகள் ஒதுக்கப்பட்டு வேலைகள் நடைபெற்றன.
அவ்வேலைகள் யாவும் பத்திரிகை மூலமான திறந்த கேள்விகோரலின் மூலமாகவே நடைபெற்றவை என்கிற அடிப்படையில் கேள்வி கோரல் தொகையை பொறுத்து சேமிப்புத் தொகையாக எஞ்சிய நிதிகளை தற்போது மக்கள் பிரதிநிதிகளை கொண்ட பிரதேச சபை அமைந்துள்ள நிலையில் சபை நிதிமூலமாக எஞ்சிய நிதிகளை கொண்டு பண்டத்தரிப்பு சந்தையில் காணப்படும், சுகாதாரமற்ற மலசலகூட குறைபாடுகள் , குடிநீர்பிரச்சினை, கழிவுநீர் வடிகாலமைப்பு பிரச்சினைகள், மீன் சந்தை இடநெருக்கடி பிரச்சினைகள் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட கூடியதான அபிவிருத்தி திட்டத்திற்க்கான நிதி ஒதுக்கீடாகவும். PSDG மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதி மூலமான பண்டத்தரிப்பு தியான இல்ல வீதி (பற்றிமா வீதி)யின் கிளை வீதிகளை புனரமைப்பு செய்வதற்குமாக ஒதுக்கி பண்டத்தரிப்பு வட்டார அபிவிருத்திகளை செய்து தருமாறு கேட்டுக்கொள்வதாக மேலும் தெரிவித்துள்ளார்






No comments