Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஆசிரியர்களுக்கான செயலமர்வின் கள ஆய்வு


புதிய கல்விச் சீர்திருத்தத்தின் பிரகாரம் முன்னெடுக்கப்படவுள்ள பாடத் திட்டங்களின் வழிகாட்டல் பொறிமுறை தொடர்பாக, ஆசிரியர்களுக்கான செயலமர்வின் கள ஆய்வொன்று இன்றையதினம் சனிக்கிழமை தீவக கல்வி வலயத்தால் முன்னெடுக்கப்பட்டது.

உலகச் சுற்றோட்டத்தின் தேவைக்கேற்ப நவீன கல்வி முறையை எமது மாணவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு கல்விக் கொள்கையில் மாற்றம் கொண்டுவரப்பட்டதற்கு இணங்க,  2026 ஆம் ஆண்டு முதல் தரம் ஒன்று மற்றும் 6 ஆகிய வகுப்புகளுக்கு நடைமுறைப்படுத்தப்படும்

பாடத் திட்டத்தின்கேற்ப தீவக கல்வி வலையத்தின் விஞ்ஞானம் மற்றும் கணித பாடங்களின் ஆசிரியர்களுக்காகவே  குறித்த செயலமர்வின் வெளிக்கள ஆய்வு முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது நில அமைவுகள், சூழலின் அக, புறத் தன்மைகள் மற்றும் தாவரங்களின் இனப் பரம்பல், நீர் நிலைகளின் அவதானிப்புகள் குறித்து ஆசிரியர்களுக்கு கள ஆய்வு முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





No comments