சர்வதேச சிறுவர்கள் தினமான நேற்றைய தினம் புதன்கிழமை சிறுவர்தின கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு பரிசில்கள் பெற்று வீடு திரும்பிய சிறுவன் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
கொழும்பு- நவகமுவ பகுதியை சேர்ந்த சேனுகா நில்ஷான் ஹெட்டியாராச்சி (வயது 04) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளான்.
குறித்த சிறுவன் நவகமுவ பிரதேசத்தில் நடைபெற்ற உலக சிறுவர் தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பரிசுகளை வென்று மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.
பின்னர் சிறுவன் வீட்டினுள் விளையாடிக்கொண்டிருந்துள்ள நிலையில், பெற்றொரின் அவதானத்தை கடந்து வீட்டின் பின்புறத்தில் அமைந்துள்ள கிணற்று பக்கம் சென்ற நிலையில், கிணற்றில் விழுந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நவகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







No comments