யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் போதை வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் 33 வயதான நபர் ஒருவர் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபரை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை அவரது உடைமையில் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 2.4 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அதனை அடுத்து குறித்த நபரை கைது செய்த சுன்னாகம் பொலிஸார் , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 





 
 
.jpg) 
No comments