Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மத்தள விமான நிலையம் தொடர்பில் அமைச்சரவையின் முடிவு


மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கான வெளிச்செல்லல் வரி தொடர்பாக வழங்கப்பட்ட சலுகை காலத்தை நீட்டிக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 

2025-01-06 திகதி அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்துக்கு அமைய மத்தள ராஜபக்ஸ சர்வதேச விமான நிலையத்துக்கு நிச்சயிக்கப்பட்ட நேரஅட்டவணைக்கமைய பயணங்களில் ஈடுபடும் விமான சேவைகளுக்கு வெளிச்செல்லல் வரியிலிருந்து விலக்களிப்பு வழங்கப்பட்டுள்ளது. 

குறித்த வரிச் சலுகையின் கீழ் சில விமான சேவைகள் ஏற்கனவே விமான நிலையத்துக்கு வரும் மற்றும் வெளியேறும் நிச்சயிக்கப்பட்ட விமான பயணங்களை கொண்டுள்ள சர்வதேச விமான பயணங்கள் அமுல்படுத்தியுள்ள அதேவேளை, சில விமான சேவைகள் குறித்த விமான நிலையத்துக்கு விமான பயணங்களை செயற்பாடுகளை இயக்குவதற்காக தமது ஆர்வங்களை வெளியிட்டுள்ளன. 

மேற்குறித்த வெளியேறல் வரிச் சலுகையை தொடர்ந்தும் பேணுவதன் மூலம் போட்டியை அதிகரிப்பதன் ஊடாக குறித்த விமான நிலையத்துக்கு நிச்சயிக்கப்பட்ட சர்வதேச விமான சேவைகளை கவருதல் மற்றும் தற்போதுள்ள சர்வதேச விமானப் பயண செயற்பாடுகளை தொடர்ச்சியாக பேணலாமென எதிர்பார்க்கப்படுகிறது. 

அதற்கமைய தற்போது செயற்படுத்தப்படும் வெளிச்செல்லல் வரி விடுவிப்பு காலத்தை 2027.06.26 திகதி வரை தொடர்ந்தும் நீடிப்பதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

இதேவேளை, மத்தள விமான நிலையத்தில் விசேட வனசீவராசிகள் அலுவலகத்தை நிறுவுவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 

அம்பாந்தோட்டை மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலைய வளாகத்தில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்நுழைவதால் அதன் நுழைவு வீதிகள் ஊடாக பாதை மாறுதல் போன்ற காரணங்களால் விமான நிலையத்தின் உட்கட்டமைப்பு வசதிகளில் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்ற சந்தர்ப்பங்கள் அதிகமாகக் காணப்படுவதுடன், விமான நிலைய நடவடிக்கைகளுக்குப் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. 

அவ்வாறு உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களை சீர்செய்வதற்காக வரையறுக்கப்பட்ட விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை), (தனியார்) கம்பனிக்கு ஏற்படுகின்ற செலவுகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது. 

அதனால், அவ்வாறான காட்டு விலங்குகளின் அச்சுறுத்தல்களை முற்கூட்டியே அடையாளங் கண்டு சரியான வகையில் முகாமைத்துவம் செய்து விமானப் பயணிகளின், விமான நிலையப் பணிக்குழாமினர் மற்றும் விமான நிலைய உட்கட்டமைப்பு வசதிகளை உறுதிப்படுத்துவதற்கும், விமான நிலைய நடவடிக்கைகளில் ஏற்படக்கூடிய தாமதங்கள் மற்றும் இடையூறுகளை குறைத்து தங்குதடையின்றிய விமான சேவைகளை பேணிச் செல்வதற்கும் இயலுமாகும் வகையில் அம்பாந்தோட்டை மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் விசேட வனசீவராசிகள் அலுவலகமொன்றை நிறுவுவதற்காக சுற்றாடல் அமைச்சர்அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments