ஒருநாள் முளைத்தே தீரும் என கவிப்பேரசு வைரமுத்து யாழ்ப்பாணத்தில் கவிதை வடித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற , மில்லர் திரைப்பட ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டமை தொடர்பில் தனது முகநூலில் கவிதை ஒன்றினை பதிவு செய்துள்ளார். அதிலையே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கவிதையாவது,
"யாழ்ப்பாணத்தில் நிற்கிறேன்;
புலம்பெயர்ந்த
உலகத் தமிழர்களோடு
உரையாட விழைகிறேன்
நீங்கள் விளையாடிய
வீதிகள் நலம்;
குடைபிடிக்கும்
வேப்ப மரங்கள் நலம்
சாவகச் சேரி சௌக்கியம்;
நீங்கள் சௌக்கியமா?
பருத்தித்துறை சௌக்கியம்;
உங்கள் பாச உறவுகள்
சௌக்கியமா?
முகமாலை நலம்;
உங்கள் முன்னோடிகள் நலமா?
புத்தூர் சௌக்கியம்;
உங்கள் பிள்ளைகள் சௌக்கியமா?
உங்கள்
தலைமுறை வரைக்கும்
தமிழ் ஈழத்தின்மீது
உங்களுக்கு தாகம் இருக்கும்
உங்கள் பிள்ளைகளுக்கும்
அதேதாகம் வேண்டுமாயின்
அவர்களையும்
தமிழ்படிக்கச் செய்யுங்கள்
மண்ணும் மொழியும்
கண்ணும் உயிரும்
என்று கற்றுக்கொடுங்கள்
விதைகளும் தியாகங்களும்
என்றைக்கும் வீணாவதில்லை;
ஒருநாள் முளைத்தே தீரும்"
என்று பேசினேன்
கண்ணீர் ததும்பக்
கரவொலி செய்தார்கள் என முகநூலில் பதிவு செய்துள்ளார்.






No comments