சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் யாழ்ப்பாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கிடையிலான நல்லிணக்க களவிஜயமாக, பொலன்னறுவை மாவட்ட செயலர் சுஜந்த ஏக்கநாயக்க மற்றும் சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு வருகை தந்தனர்.
அவர்களை கடற்றொழி்ல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், மேலதிக செயலர் க.சிவகரன் , திட்டமிடல் பணிப்பாளர் இ.சுரேந்திரநாதன் , உதவி மாவட்டச் செயலாளர் உ.தர்சினி ஆகியோர் வரவேற்றார்கள்.
அவர்களின் களவிஜயத்தின் ஞாபகார்த்தமாக யாழ். மாவட்ட செயலரிடம் நினைவுச்சின்னம் வழங்கப்பட்டதோடு பழைய பூங்காவில் மரக்கன்றுகளும் நாட்டப்பட்டது.
இவ் விஜயத்தில் FAIR MED நிறுவனத்தினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக மாவட்ட சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் தி.உமாசங்கரால் விளக்கமளிக்கப்பட்டது.
இவ் நல்லிணக்க களவிஜயத்தில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலை, கோப்பாய் "கிறவ்ரறி" கலைப்பொருள் உற்பத்தி நிலையம் மற்றும் சக்கர நாற்காலி திருத்தகம் என மாற்றுத்திறனாளிகள் இல்லங்கள் மற்றும் மாற்றத்திறனாளிகளால் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக களத்தரிசிப்புக்கள் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.










No comments