வடமாகாண ஆசிரியர்கள் ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்றைய தினம் புதன்கிழமை மூன்றாவது நாளாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
ஆசிரியர் இடமாற்ற கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறும், கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கஷ்டப் பிரதேசம் மற்றும் அதி கஷ்டபிரதேசங்களில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கான இடம் மாற்றங்கள் சரியான முறையில் வகுக்கப்படவில்லை என கூறி வடமாகாண ஆசிரியர்கள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை முதல் வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டள்ளனர்.
போராட்டத்தின் போது வடமாகாண ஆளுநர் அலுவலகத்தினுள் போராட்டக்காரர்கள் உட்புக முயற்சித்த வேளை பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அதனால் போராட்ட காலத்தில் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது.
No comments