வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வல்லிபுர ஆழ்வார் கோவில் வருடாந்திர தேர் திருவிழா இன்றைய தினம்(5) ஞாயிற்றுக்கிழமை மிக சிறப்பாக இடம்பெற்றது.
தேர் திருவிழாவின் போது, யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நூற்றுக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்டை , ஆட்டக்காவடி , தூக்கு காவடி பால் காவடி,கற்பூர சட்டி எடுத்து தமது நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர்.
நாளைய தினம் திங்கட்கிழமை மாலை சமுத்திர தீர்த்தம் மிக சிறப்பாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments