புத்தளம் பொலிஸாரினால், முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, 524 கிராம் ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனைமடுவ பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 23 வயதுடைய தம்பதியினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இப்பாகமுவ பகுதியில் உள்ள தமது பாட்டியின் வீட்டில் தங்கியிருந்து போதைப்பொருள் வியாபாரத்தை முன்னெடுத்து வந்துள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தை பெறுமதி சுமார் 80 இலட்சம் ரூபாய் என பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஒன்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் இந்தத் தம்பதியினர் நேரடித் தொடர்புகளைப் பேணி வந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது குறித்த மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக சந்தேக நபர்களைத் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.







No comments