வல்வெட்டித்துறையில் சிற்றுண்டிச்சாலை ஒன்றில் காலாவதி கடந்த உணவுப்பொருட்களை விற்பனைக்கு வெளிக்காட்டிய உரிமையாளருக்கு 20 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் பொது சுகாதார பரிசோதகரால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது இன்றைய தினம் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, உரிமையாளர் தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து , அவரை கடுமையாக எச்சரித்த மன்று 20 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.






No comments