இரத்தினபுரி - ரத்தனபிட்டிய பகுதியில் கழிவுப்பொருட்களை ஏற்றிச் சென்ற டிப்பர் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் லொறியின் சாரதியான சூரியமல் மாவத்தையைச் சேர்ந்த கே. டட்லி ஆனந்த (வயது 51) என்பவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நுகேகொட பகுதியில் ஒரு கட்டடத்தை இடித்து அகற்றும் வேலைக்கான ஒப்பந்தத்தை பெற்று அங்கிருந்த கழிவுகளை டிப்பர் லொறியில் ஏற்றி சென்ற வேளையில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






No comments