கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரின் சகோதரனும் யாழில். போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட மூவரையும் யாழ்ப்பாணம் வரவழைத்து , அவர்களுக்கு உதவிகள் புரிந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை நேற்றைய தினம் திங்கட்கிழமை பொலிஸார் கைது செய்தனர்.
குறித்த இளைஞன் காரில் பயணித்துக்கொண்டிருந்த வேளை காரை மடக்கி இளைஞனை பொலிஸார் கைது செய்த வேளை , காரினுள் இருந்து 5 ஆயிரம் போதை மாத்திரைகள் மற்றும் வாள் ஒன்றினையும் பொலிஸார் மீட்டிருந்தனர்.
கைது செய்த இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , இளைஞனின் சகோதரனும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபடுவதனை கண்டறிந்த பொலிஸார் , சகோதரனை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்த வேளை , அவரது உடைமையில் இருந்தும் 2 ஆயிரம் போதை மாத்திரைகளை மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவரும் கடந்த காலங்களில் வன்முறை கும்பல்களுடன் சேர்ந்து யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்பு பட்டவர்கள் எனவும் , அவர்கள் தற்போது தென்னிலங்கை கும்பல்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி , போதைப்பொருள் விற்பனை , மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்







No comments