அச்சுவேலி பத்தமேனி இரத்தினேஸ்வரி வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வளைவு பாராளுமன்ற உறுப்பினர் ஜெயசந்திரமூர்த்தி ரஜீவனால் இன்றைய தினம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பாடசாலையில் நீண்ட காலமாக பாதையின் வளைவு இல்லாத காரணத்தினால் அதிபரின் கோரிகைக்கு அமைவாக பாடசாலையின் பழைய மாணவர்களால் குறித்த வளைவு அமைத்துக் கொடுக்கப்பட்டது.
குறித்த வளைவினை பாராளுமன்ற உறுப்பினர் ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் நாடாவை வெட்டி திறந்து வைத்தார்.








No comments