இருபதுக்கு 20 முத்தரப்பு தொடரின் முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்களால் சிம்பாப்வே அணியை வீழ்த்தியுள்ளது.
பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் இடம்பெற்ற இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதின
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பாடிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
சிம்பாப்வே அணி சார்பில் துடுப்பாட்டத்தில் பிரைன் பெனட் 49 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.
இந்நிலையில் 148 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
பாகிஸ்தான் அணி சார்பில் பகர் சமான் 45 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.



.jpeg)


No comments