யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
யாழ் . நகர் பகுதியை அண்டிய பிரதேசங்களில் மாவட்ட போதைத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது , போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
கைது செய்யப்பட்ட ஐவரிடம் இருந்தும் , 580 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும், 400 போதை மாத்திரைகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்
கைது செய்யப்பட்ட ஐவரிடமும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்






No comments