வடக்கின் மூன்று மாவட்டங்களை விசேட தேவையுடைய மாணவர்களின் " inclusive talent show " எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கொடிகாமம் “நட்சத்திர மஹால்” மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
JSAC நிறுவனம் knh/Bmz இன் நிதி அனுசரணையுடன் உட்படுத்தல் கல்வியை நடைமுறைப்படுத்தல் எனும் நோக்கினை அடிப்படையாக கொண்டு பாடசாலை மட்டங்களிலும், சமூக மட்டங்களிலும் விசேட தேவையுடைய மாணவர்களை இனம் கண்டு அவர்கள் கலை கலாசார நிகழ்வுகளில் பங்குபற்றுவதை ஊக்குவித்து வருகிறது.
அத்துடன் உட்படுத்தல் கல்விச்செயற்பாடுகளிலும் உள்வாங்கப்படுவதனை உறுதி செய்து அவர்கள் சேவைகளை பெறுவதில் முகம்கொடுக்கும் தடைகளையும் நிவர்த்தி செய்யும் முகமாக அமைச்சுக்கள் மற்றும் அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் 2023 தொடக்கம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் சேவையாற்றி வருகின்றது.
அந்த வகையில் இச் செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக மும்மாவட்ட சிறார்கள் பங்குபற்றும் inclusive talent show எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கொடிகாமம் “நட்சத்திர மஹால்” மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக வட மாகாண ஆளுனர் நாகலிங்கம் வேதநாயகம் அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






No comments