சாவகச்சேரி பகுதியில் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த சந்தேக நபரை கைது செய்ய சென்ற பொலிசாரை வாளை காட்டி அச்சுறுத்திய நபரை பொலிஸார் மடக்கி பிடித்துள்ளனர்.
சாவகச்சேரி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இன்றைய தினம் புதன்கிழமை இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் , அவரது உடைமையில் இருந்து போதைப்பொருளும் மீட்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட இளைஞனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , நாவற்குழி பகுதியில் உள்ள இளைஞனிடமும் போதைப்பொருள் இருப்பதாக அறிந்து கொண்ட பொலிஸார் இளைஞனை கைது செய்ய சென்ற போது வாளை காட்டி பொலிசாரை அச்சுறுத்தியுள்ளார்.
பொலிஸார் வாளுடன் இளைஞனை மடக்கி , பிடித்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை , இளைஞனின் உடைமையில் இருந்தும் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் , பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.







No comments