பாரிய போதைப்பொருள் கடத்தல் படகொன்று பெருமளவான போதைப்பொருட்களுடன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த படகில் இருந்து சுமார் 376 கி.கி போதைப் பொருள் 1 ரிவோல்வர், 1 பிஸ்டல் மற்றும் 2 மெகசீன்கள் என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த படகினை நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை தங்காலை மீன்பிடித் துறைமுகத்திற்கு கடற்படையினர் கொண்டு வந்தனர்.
அந்தப் படகில் இருந்து 5 பைகளில் 100 பொதிகளாக அடைக்கப்பட்டிருந்த 115 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் 13 பைகளில் 200 பொதிகளாக அடைக்கப்பட்டிருந்த 261 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப் பொருளும் மீட்கப்பட்டன
மேலும், ஒரு ரிவோல்வர், ஒரு பிஸ்டல் மற்றும் 2 மெகசீன்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பன்னல பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள பிரதேச சபை உறுப்பினரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்










No comments