சமூகத்தை உலுக்குகின்ற – பிறழ்வுக்கு காரணமான உயிர்கொல்லி போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்திருக்கின்றது. இன்றைய பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை காலத்துக்கேற்ற ஒன்றாகும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
கரணவாய் தாமோதர வித்தியாலயத்தின் நிறுவுநர் தினமும் பரிசளிப்பு விழாவும் பாடசாலையின் அதிபர் ஆனந்தராசா விமலராசா தலைமையில் பாடசாலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது.
விருந்தினர்கள் பாண்ட் அணிவகுப்புடன் வரவேற்கப்பட்டு திருவுருவச் சிலைகளுக்கான மலர்மாலை அணிவிக்கப்பட் பின்னர் மேடை நிகழ்வுகள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து ஆளுநர் உரையாற்றும் போது,
மாணவர்களிடம் தலைமைத்துவ பண்புகளை வளர்த்தல் மிகத் தேவையானது. நாளைய சமூகத்திலும் அரசியல், நிர்வாக, கல்வி மற்றும் பிற துறைகளிலும் முக்கியப் பொறுப்புகளை ஏற்கப் போவது நீங்கள் தான். ஆனால் இன்று பல இடங்களில் தலைமைத்துவ குறைபாடு காரணமாக மக்களுக்கு சேவை வழங்கும் நிறுவனங்கள் சவால்களை எதிர்கொள்கின்றன.
செய்யத்தக்க ஒன்றைச் செய்யாமல் காரணம் கூறுவோர் அதிகம். நேர்மையான சிந்தனை, பிறருக்கு உதவுதல், பொறுப்பு உணர்வு போன்ற பண்புகள் பல இடங்களில் குறைவாகத் தெரிவதைக் காண்கிறோம். ஆகையால், கல்வியில் முன்னேறுவதோடு சேர்த்து உயர்ந்த மனிதப்பண்புகள் வளர்த்துக்கொள்வது அவசியம். அப்போதுதான் நீங்கள் சமூகத்தில் மரியாதைக்குரியவர்களாக திகழ்வீர்கள்.
உங்களின் வளமான எதிர்காலத்துக்காக எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினராக வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளரும், நிறுவுநர் குடும்ப உறுப்பினருமான சி.வசீகரன் கலந்துகொண்டார். அத்துடன் வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளரும் நிகழ்வில் பங்கேற்றார்.




.jpg)
.jpg)
.jpg)
.jpg)


No comments