யாழ்ப்பாணத்தில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண நகர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய மூவரை பொலிஸார் விசாரணை செய்த போது , அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் 20 போதை மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் , மூவரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.







No comments