யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளை எதிராக பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையினால் . போதைப்பொருளுக்கான விலைகள் அதிகரித்துள்ளதாக , போதை மாத்திரைகளுடன் கைதான இரு இளைஞர்கள் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாண நகர் பகுதியை அண்மித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த இரு இளைஞர்களை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மடக்கி சோதனையிட்ட போது , அவர்களிடம் இருந்து 3200 போதை மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர்.
அதனை அடுத்து இருவரையும் கைது செய்து பொலிஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்த வேளை, இருவரும் ஐந்து சந்தி பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் , இருவருக்கும் 21 வயது என தெரிவித்துள்ளனர்.
அத்துடன் போதைப்பொருளுக்கு எதிராக பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கைகள் காரணமாக போதைப்பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது , அதனால் அவற்றின் விலைகள் பல மடங்கு அதிகரித்துள்ளதால் , போதை மாத்திரைகளுக்கான கேள்வியும் அதிகரித்ததால் , அவற்றின் விலையும் அதிகரித்துள்ளது. மாத்திரை ஒன்று 300 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கார்ட்டில் 10 குளிசைகள் உள்ளன. அவை 3ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது என விசாரணைகளில் தெரிவித்துள்னர்.








No comments