கொழும்பு மஹரகம நகர் பகுதியில் உள்ள கடைத்தொகுதியில் இருந்து நிர்வாணமான நிலையில் மூதாட்டியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உடற்கூற்று பரிசோதனையில் மூதாட்டி கொடூரமான முறையில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு , படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது
சடலமாக மீட்கப்பட்டவர், கும்புகவத்தை - கோனபல பகுதியைச் சேர்ந்த 64 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
,மஹரகம பொலிஸாருக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை , கடை தொகுதியில் நிர்வாணமாக பெண்ணொருவரின் சடலம் காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு , களுபோவில வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
வைத்தியசாலையில் இடம்பெற்ற உடற்கூற்று பரிசோதனையின் போது , மூதாட்டி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது .
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.






No comments