Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இளங்குமரன் எம்.பி க்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ள சுமந்திரன்


யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கும், கஜபாகு என்பவருக்கும் எதிராக ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன்  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, இளங்குமரன் சார்பாக ஆஜரான சட்டத்தரணி சாமர நாணயக்கார, கஜபாகுவுக்கு சட்டத்தரணி ஒருவரை நியமிப்பதற்கு கால அவகாசம் கோரியதால் வழக்கு எதிர்வரும் பெப்ரவரி 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அகதியாக தஞ்சம் கோரியிருந்த சின்னையா சிறிலோகநாதன் அங்கிருந்து கடந்த மே 29ஆம் திகதி பலாலி விமான நிலையம் ஊடாக வருகை தந்திருந்த நிலையில் அவர் குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்ததர்.

பின்னர் 30ஆம் திகதி மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, சின்னையா சிறிலோகநாதனின் புதல்வரின் கோரிக்கைக்கு அமைவாக எம்.ஏ.சுமந்திரன் மன்றில் ஆஜராகி வாதங்களை முன் வைத்த போதிலும்  நீதிவான் சின்னையா சிறிலோகநாதனை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். 

அந்நிலையில் மறுநாள், இளங்குமரன் எம்.பி. உள்ளிட்டவர்கள் பிறிதொரு சட்டத்தரணி மூலம் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்து பிணை விண்ணம் செய்த போது, அதனை மன்று ஏற்று,  அவருக்கு பிணை வழங்கப்பட்டது. 

அதன்பின்னர் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக  இளங்குமரன் எம்.பி.உள்ளிட்டவர்கள் சுமந்தினை மையப்படுத்தி சிறிலோகநாதன் விளக்கமறியலில் வைக்கப்படுவதற்கு சுமந்திரன் காரணம் என்ற சாரப்படத் கருத்துக்களை தெரிவித்தார் என்றே, சுமந்திரன் இளங்குமரனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments