ஆலய உண்டியலில் காணிக்கை போட்டு விட்டு , பேருந்தில் ஏற முற்பட்ட நடத்தினர் தவறி விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை 5ம் கட்டை பகுதியை சேர்ந்த லலித் குமார (வயது 41) என்பவரே உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை - கந்தளாய் வரையான தனியார் பேருந்து சேவையில் நடத்துனராக , கடமையாற்றி வரும் இவர் , இன்றைய தினம் வியாழக்கிழமை பாலம்போட்டாறு, கண்டி - திருகோணமலை வீதியில் உள்ள கோயில் உண்டியலில் காணிக்கை போட்டு விட்டு மீண்டும் பேருந்தில் ஏற முற்பட்ட வேளை தவறி விழுந்துள்ளார்.
தவறி விழுந்ததில் தலையில் படுகாயமடைந்த நிலையில் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை உயிரிழந்துள்ளார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.






No comments