Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

அநுராதபுரத்தில் போதைப்பொருளுடன் அதிபர் கைது - ஒரு கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு


அநுராதபுரம், எப்பாவல பிரதேசத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றின் அதிபர், ஒரு கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

சுமார் ஒரு வாரத்திற்கு முன்னர் எப்பாவல, நல்லமுதாவ வீதியில் வைத்து கைது செய்யப்பட்ட 30 வயதுடைய ஒருவரிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், அநுராதபுரம் குற்றத்தடுப்புப் பிரிவினர் இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். 

இதன்போது, குறித்த அதிபருக்குச் சொந்தமானது எனக் கூறப்படும், எப்பாவல, அதகல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு பின்னால் புதைக்கப்பட்டிருந்த 1 கிலோ 185 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இது தவிர, குறித்த அதிபரால் அருகில் உள்ள ஒரு குளத்தில் வீசப்பட்டிருந்த போதைப்பொருளை அளக்கப் பயன்படுத்தப்படும் மின்னணுத் தராசு மற்றும் பொலித்தீன் சீலர் இயந்திரம் ஆகியனவும் கண்டுபிடிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட குறித்த அதிபரின் மனைவி, தேசிய மக்கள் சக்தியின் பேலியகொடை நகரசபையின் உறுப்பினர் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மேலும், குறித்த அதிபரின் மகனும் ஒரு மாதத்திற்கு முன்னர் 25 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இச்சம்பவம் குறித்து அநுராதபுரம் குற்றத் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments