Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வலி. வடக்கில் 20 சதவீதமான நிலப்பரப்பரப்பு இன்னமும் விடுவிக்கப்படவில்லை.


யாழ்ப்பாணம் , வலிகாமம் வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில்  20 சதவீதமான நிலங்கள் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்படாத பிரதேசங்களாக காணப்படுகின்றது என வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

வலி வடக்கு பிரதேசசபையின் உள்ளூராட்சி வார இறுதி நாள் நிகழ்வும் விருது வழங்கலும் பன்னாலை வர்த்தலம் விநாயகர் ஆலய மண்டபத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார் 

மேலும் தெரிவிக்கையில், 

எமது வலி வடக்கு  பிரதேசமானது இராணுவ ஆக்கிரமிப்புக்குள் இருந்து படிப்படியாக விடுவிக்கப்பட்ட போதிலும் 20 சதவீதமான நிலங்கள் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்படாத பிரதேசங்களாக காணப்படுகின்றது.

குறிப்பாக 21 வட்டாரங்களாகக் காணப்படினும் 20 வட்டாரங்களே விடுவிக்கப்பட்டுள்ள  போதிலும், பலாலி வடமேற்கு  மற்றும் பலாலி மேற்கு ஒரு அங்குலம் கூட விடுவிக்கப்படாத நிலையுள்ளது.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்த போதிலும் மக்களின்  காணிகள் விடுவிக்கப்படவில்லை  தமது காணிகள் விடுவிக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர். இதற்கு எமது சபை உறுப்பினர்கள் முயற்சியை எடுத்துக் கொண்டுள்ளனர்.

இவற்றோடு எமது தலைமை அலுவலகம் காங்கேசன்துறையில் அமைவதே எமது எதிர்கால இலட்சியமாகும்.  வரவுள்ள 2026ம் ஆண்டு வரவு செலவுத் திட்டமும் அதை நோக்கியதாகவே அமைந்துள்ளது. 

வளமான  எமது பிரதேசத்தில் வளங்கள் குறைவாக  இருந்தும் தற்போது இலங்கையிலுள்ள சகல உள்ளூராட்சி சபைகளிலும் முதன்மையாக செயற்படுகின்றது எனத் தெரிவித்தார். 

No comments