துடுப்பாட்ட போட்டியின் போது பிடியெடுப்பை எடுக்க முற்பட்ட வேளை இரு வீரர்கள் ஒருவருடன் ஒருவர் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றையவர் காயங்களின்றி தப்பித்துக்கொண்டுள்ளார்.
மினுவன்கொட அதுலுபொல பொது விளையாட்டரங்கில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரண்டு அணிகளுக்கு இடையிலான துடுப்பாட்ட போட்டி இடம்பெற்றது.
அதன் போது பிடியெடுப்பு ஒன்றினை பிடிக்க முற்பட்ட வேளை , இரு வீரர்கள் ஒருவருடன் ஒருவர் மோதியுள்ளனர். அதில் ஒருவர் தலையில் காயங்களுடன் கீழே விழுந்த நிலையில் , அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு .மினுவன்கொட ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
பொல்கஹவெல கெட்டுவெல்கம பகுதியைச் சேர்ந்த இஹலகே தனுஷ்க தேவிந்த பெரேரா எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.







No comments