யாழ் பல்கலைக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வடக்கு கிழக்கில் வாழும் அவயவங்களை இழந்த மற்றுமொரு தொகுதியினர் சென்னை இன்றைய தினம் சென்றுள்ளது.
கனேடிய அரசு, கனடா வாழ் இலங்கை புலம்பெயர் மக்கள் ஆகியோரின் நிதிப்பங்களிப்புடன் யாழ் பல்கலைக் கழகம் முன்னெடுக்கும் இந்த திட்டமானது, வடக்கு கிழக்கில் அவயவங்களை இழந்து வாழும் மக்களின் மறுவாழ்வை மையப்படுத்தியதாக முன்னெடுக்கப்படுகின்றது.
இதன் அடிப்படையில் மாற்று அவயவங்கள் பொருத்தும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் செயற்பாடுகளுக்காக 35 பேர் கொண்ட மாற்றுத் திறனாளிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.






No comments