வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்தில் இராணுவத்தினரும், பொலிஸாரும் ஈடுபடவில்லை. ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பாதுகாப்பு பிரதி அமைச்சரான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் உரையாற்றியதாவது,
வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்தில் இராணுவத்தினரும், பொலிஸாரும் ஈடுபடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிடுகிறார்.
அவ்வாறு முறையற்ற வகையில் செயற்படும் இராணுவத்தினர், பொலிஸார் யார், அவர்களின் சேவை பிரதேசம் தொடர்பான விபரங்களை வெளிப்படுத்த வேண்டும்.
அவ்வாறு குறிப்பிட்டால் ஆராய்ந்து பார்ப்போம். இவர் குறிப்பிடுவதை போன்று பாதுகாப்பு தரப்பினர் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புப்படவில்லை என மேலும் தெரிவித்தார்.






No comments