Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஜெனரேட்டர் புகையை சுவாசித்த குடும்பப் பெண் மரணம்


வீடொன்றினுள் இயங்கிக்கொண்டிருந்த மின்பிறப்பாக்கியிலிருந்து (ஜெனரேட்டர்) வெளியான நச்சுவாயுவை சுவாசித்ததால் உயிரிழந்த குடும்பப் பெண்ணின் சடலம், உறவினர்களிடம் இன்றைய தினம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. 

அம்பாறை கல்முனைக்குடி 5ஆம் பிரிவு, புதிய வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இச்சம்பவம் கடந்த 04 ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது. 

இவ்வனர்த்தத்தில் புதிய வீதியில் வசித்து வந்த 54 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்தார். 

சம்பவத்தன்று குறித்த வீட்டில் தாய், தந்தை, மகள் ஆகியோர் இருந்துள்ள நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதன்போது, வீட்டினுள் இயங்கிய ஜெனரேட்டரிலிருந்து கசிந்த வாயுவினால் காபன் மொனொக்சைட் (Carbon monoxide) காற்றுடன் கலந்து நஞ்சாகிய நிலையில், அதனை சுவாசித்தமையாலேயே குறித்த பெண்ணின் மரணம் சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

No comments