சட்டவிரோத மதுபானத்தை பெக்கெட்டுகளில் அடைத்து, தூர இடங்களுக்குச் செல்லும் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர்களுக்கு விற்பனை செய்து வந்த கணவன் மற்றும் மனைவியான கர்ப்பிணிப் பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வென்னப்புவ, வைக்கால பிரதேசத்தைச் சேர்ந்த கணவன் மனைவி ஆகியோர் இணைந்து மதுபானத்தை பெக்கெட்டுகளில் அடைத்துக்கொண்டிருந்த போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 96 போத்தல்கள் கசிப்பு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரையும் மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.







No comments