இலங்கைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் கடற்படையினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது, சுமார் 193 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
11 பொதிகளில் பொதி செய்யப்பட்டிருந்த இந்த போதைப்பொருட்கள், உள்நாட்டு பலநாள் மீன்பிடி படகு ஒன்றின் மூலம் கடத்தப்பட்ட போது கைப்பற்றப்பட்டுள்ளன
குறித்த படகில் இருந்து சுமார் 172 கிலோகிராமிற்கும் அதிக ஐஸ் (Ice) போதைப்பொருளும், 21 கிலோகிராமிற்கும் அதிக ஹெரோயின் போதைப்பொருளும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.











No comments