முதியோர்கள் எமது சமூகத்தின் உயிர்த்துடிப்பான அடித்தளமாகும். அவர்களின் வாழ்க்கையை மரியாதையுடனும் பாதுகாப்புடனும் நடத்துவதற்கு தேவையான அடிப்படை வசதிகளை உறுதி செய்வது எமது அனைவரின் கடமையாகும் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
நல்லூர் பிரதேச செயலகத்தில், தேசிய முதியோர் செயலகத்தின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட முதியோர்களுக்கான கட்டில்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
அந்நிகழ்வில் கலந்து கொண்டு முதியவர்களுக்கு கட்டில்களை வழங்கி வைத்த பின்னர் அங்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
நிகழ்வின் போது, முதியோர்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடி, அவர்களின் நாளாந்த வாழ்க்கைச் சவால்கள், உடல் நலம், சமூகப் பாதுகாப்பு மற்றும் எதிர்பார்ப்புகள் தொடர்பாக கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர், இத்தகைய நலத்திட்டங்கள் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதையும், முதியோர் நலனுக்கான நடவடிக்கைகள் எதிர்காலத்திலும் வலுப்படுத்தப்படும் என்பதையும் கூறிக்கொண்டார்.











No comments