Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில் இருந்து கிளிநொச்சி சென்று திருடிய குற்றத்தில் ஒருவர் கைது


யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி பகுதிக்கு சென்று திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீடொன்றில் , வீட்டார் வெளியே சென்ற சமயம் , வீடு புகுந்து சுமார் 23 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் 60 ஆயிரம் ரூபாய் பணம் என்பவை திருடப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் வீட்டாரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் , பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , திருட்டு போன நகைகளில் ஒரு தொகுதியும் , 41 ஆயிரத்து 860 ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட நபரை தொடர்ந்தும் பொலிஸ் காவலில் வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments