நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் விநியோகத்தை முறியடிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் 'முழு நாடும் ஒன்றாக" தேசிய நடவடிக்கையின் கீழ், நேற்றைய தினம் சனிக்கிழமை 945 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
கைது செய்யப்பட்டவர்களில் 16 சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன.
17 சந்தேக நபர்கள் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது சந்தேக நபர்களிடம் இருந்து 637 கிராம் ஐஸ், 285 கிராம் ஹெரோயின், 3 கிலோகிராம் 432 கிராம் கஞ்சா செடிகள் மற்றும் ஏராளமான பிற போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.







No comments