யாழ் மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் டிசம்பர் மாத இறுதி வரை கட்டணக் கழிவகற்றல் முறையை தற்காலிகமாக நிறுத்த தீர்மானிக்கப்பட்டது.
யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற போதே மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜாவால் அறிவிக்கப்பட்டதுடன் மாநகர சபை உத்தியோகத்தர்களுக்கும் அறிவிக்கப்பட்டது.
டித்வா புயல் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளிலும் கழிவுகள் தேங்கியுள்ளதால் மனிதாபிமான அடிப்படையில் அனைத்து பகுதிகளிலும் உள்ள கழிவுகளை டிசம்பர் மாத நிறைவு பெறும் வரை கட்டணத்தை அறவிடாமல் கழிவுகளை அகற்ற தீர்மானிக்கப்பட்டது.




.jpg)


No comments