Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். 22 நாட்களுக்குள் 48 வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை!


யாழ்ப்பாணத்தில் எரிவாயுவுக்கு (GAS) போலியான தட்டுப்பாட்டை ஏற்படுத்துதல், பதுக்குதல் போன்ற செயற்பாடுகள் இடம்பெற்றால் அது தொடர்பில் 021-221-9001 எனும் இலக்கத்திற்கு அறிவிக்குமாறு மாவட்ட செயலர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார். 

அது தொடர்பில் மாவட்ட செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

பண்டிகை காலத்தை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவலகம் அதிகார சபையினர் மாவட்டம் முழுவதும் விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. 

அந்த வகையில் டிசம்பர் மாதத்தில் 22ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மட்டும் 48 வியாபார நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது 

காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை, கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்தமை, விலை காட்சிப்படுத்தாமல் பொருட்களை விற்பனை செய்தமை, பொதிகளில் உள்ள சுட்டுத் துண்டுகளில் திரிவுகளையும் மாற்றங்களையும் செய்தமை, போலி தயாரிப்புகள் மற்றும் எஸ். எல். எஸ் (SLS) குறியீடற்ற தரமற்ற பொருட்களை விற்பனை செய்தமை மின்சார மற்றும் இலத்திரனியல் சாதனங்களுக்கு உத்தரவாத சீட்டு (Warranty card) வழங்கப்படாமல் விற்பனை செய்தமை போன்ற பல்வேறு குற்றங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை எரிவாயுவுக்கு (GAS) போலியான தட்டுப்பாட்டை ஏற்படுத்துதல், பதுக்குதல் போன்ற செயற்பாடுகள் இடம்பெறுவதாக அறிய முடிகிறது. அது தொடர்பில் பொதுமக்கள் ஏதேனும் அசெளகரியங்கள் ஏற்படின் 021-221-9001 என்ற மாவட்ட பாவனையாளர் அலுவலகங்கள் அதிகார சபைக்கு முறைப்பாட்டினை வழங்க முடியும்.

தவறிழைக்கும் வியாபாரிகளுக்கு எதிராக தொடர்ந்தும் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் அதேவேளை பொதுமக்களும் பாவனைக்காக பொருட்களை கொள்வனவு செய்யும்போது மிகவும் அவதானமாக செயற்படுமாறு அந்த அறிக்கையில் மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார். 


No comments