ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக மரிக்கார் மொஹம்மட் தாஹிர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இஸ்மாயில் முத்து முஹம்மது தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தததை அடுத்து வெற்றிடமான பதவிக்கு மரிக்கார் மொஹம்மட் தாஹிர் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
இன்றைய தினம் பாராளுமன்ற நடவடிக்கைகள் காலை 9.00 மணிக்கு ஆரம்பமானதுடன், விவாதத்தின் பின்னர் இவ்வாறு மாலை 6.00 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.




.jpeg)


No comments